காத்திருந்து காத்திருந்து
கனத்துப் போய்
கட்டுக்கடங்காமல் அலைமோதும்
காதலியே (கார்மேகமே)!
வாடி நிற்கும்
காதல் முகம் பாராயோ !
வந்து மடி சேராயோ !
கனத்த காதல் மனதை,
மெல்லிய என் - சுவாச
காற்று கொண்டு கலைக்கவா ?
கடல் இறங்கி மண் தொட்டது போல் ,
காட்றாறாய் , புயல் காற்றாய்
கட்டுக்கடங்காமல்,
கலந்து கிடப்போம் வா!!!
Friday, October 29, 2010
Tuesday, September 28, 2010
மழையே மழையே ஓடி வா !
மழையே மழையே ஓடி வா !
மண்ணில் இறங்கி ஆட வா!
புதிய தாளம் போடா வா !
மண்ணின் மனம் உணர்த்த வா!
பயிர்கள் எல்லாம் தழைக்கவே ,
பசுமை எங்கும் நிறையவே ,
பாரில் இன்பம் நிலைக்கவே -
தரை இறங்கு மேகமே !
தரணி எல்லாம் வாழவே !!
மண்ணில் இறங்கி ஆட வா!
புதிய தாளம் போடா வா !
மண்ணின் மனம் உணர்த்த வா!
பயிர்கள் எல்லாம் தழைக்கவே ,
பசுமை எங்கும் நிறையவே ,
பாரில் இன்பம் நிலைக்கவே -
தரை இறங்கு மேகமே !
தரணி எல்லாம் வாழவே !!
Monday, September 6, 2010
பயணத் துணை!
தொலை தூர
பேருந்து பயணத்தில் ,
பக்கத்தில் நீ இல்லை என்ற பரிதவிப்பை,
என்னோடு நடந்து வந்த
பால் நிலா பகிர்ந்தது!
பேருந்து பயணத்தில் ,
பக்கத்தில் நீ இல்லை என்ற பரிதவிப்பை,
என்னோடு நடந்து வந்த
பால் நிலா பகிர்ந்தது!
Saturday, August 28, 2010
ஒரு யுகம் கடத்தது போல்..
உன்னை தேடும் விழிகள்
உன்னவருடையதாக இருக்கலாம்.
ஆனால் ,
உனக்காக உருக்கி அழும் விழிகள்
என்னுடையது .
காலை தனிமையை
காபி குடித்து
கடந்து செல்ல - உன்
கணவரால் முடியும்.
ஆனால் ,
கதிரவனே!
காலையில் நீ இல்லையேல்,
என் நாளே
விடிவதில்லை!
என் உலகில் ,
நேற்று பார்த்தது
எதுவும் மாறவில்லை !
ஆனால்,
இன்று எதுவும் எனதில்லை :(
பசித்து உண்ணவில்லை!
சிரித்து பேசவில்லை!
விளையாடி தீர்கவில்லை!
விருப்பம் போல் நடக்கவில்லை !
உற்சாகம் எனக்கில்லை!
உன் பெயரை தவிர,
வேறேதுவும் உச்சரிக்கவில்லை !
வெறித்து பார்த்தேன் விட்டத்தை
வெறுத்து பார்த்தேன் இந்த நாளை !
தேடி தீர்த்துவிட்டேன்
தென்படுவாய் என!
தேய்ந்து ஓய்ந்துவிட்டேன்
தேடல் பொய்த்ததென!
ஒரு வயதான என்னை ,உன்னவருடையதாக இருக்கலாம்.
ஆனால் ,
உனக்காக உருக்கி அழும் விழிகள்
என்னுடையது .
காலை தனிமையை
காபி குடித்து
கடந்து செல்ல - உன்
கணவரால் முடியும்.
ஆனால் ,
கதிரவனே!
காலையில் நீ இல்லையேல்,
என் நாளே
விடிவதில்லை!
என் உலகில் ,
நேற்று பார்த்தது
எதுவும் மாறவில்லை !
ஆனால்,
இன்று எதுவும் எனதில்லை :(
பசித்து உண்ணவில்லை!
சிரித்து பேசவில்லை!
விளையாடி தீர்கவில்லை!
விருப்பம் போல் நடக்கவில்லை !
உற்சாகம் எனக்கில்லை!
உன் பெயரை தவிர,
வேறேதுவும் உச்சரிக்கவில்லை !
வெறித்து பார்த்தேன் விட்டத்தை
வெறுத்து பார்த்தேன் இந்த நாளை !
தேடி தீர்த்துவிட்டேன்
தென்படுவாய் என!
தேய்ந்து ஓய்ந்துவிட்டேன்
தேடல் பொய்த்ததென!
ஒரு நாள் நீ பிரிந்தது எனக்கு
ஒரு யுகம் கடத்தது போல்
இருக்குது அம்மா !
பாவம்ல இந்த குட்டியம்மா :(
Monday, July 19, 2010
உலக அழகி நீதாண்டி
ஓட்ட பல்லி,
உருண்டை இடுப்பி - நீதாண்டி !
முட்டக் கண்ணி
மொன்ன மூக்கி - நீதாண்டி !
இட்லி கன்னம்
இழுச்ச வாயி - நீதாண்டி !
புட்டு சட்டி
பூசணிக்க - நீதாண்டி !
அடி அழகி
உன்னை என்ன சொன்னாலும்
உலக அழகி நீதாண்டி!!!
உருண்டை இடுப்பி - நீதாண்டி !
முட்டக் கண்ணி
மொன்ன மூக்கி - நீதாண்டி !
இட்லி கன்னம்
இழுச்ச வாயி - நீதாண்டி !
புட்டு சட்டி
பூசணிக்க - நீதாண்டி !
அடி அழகி
உன்னை என்ன சொன்னாலும்
உலக அழகி நீதாண்டி!!!
Monday, July 5, 2010
மங்கை இவள்
பச்சை பட்டுடுத்தி,
பவல்ல மல்லி பூச்சூடி ,
ஈரத் தலை கோதி,
இளகிய பார்வை வீசி ,
இறுகிய நெஞ்சங்களை இலகக்க,
மலர் பந்து மடி தந்து காத்து நிக்கும்
மங்கை இவள் -
மலைகளின் அரசியாம் நீலகிரி !!!
பவல்ல மல்லி பூச்சூடி ,
ஈரத் தலை கோதி,
இளகிய பார்வை வீசி ,
இறுகிய நெஞ்சங்களை இலகக்க,
மலர் பந்து மடி தந்து காத்து நிக்கும்
மங்கை இவள் -
மலைகளின் அரசியாம் நீலகிரி !!!
Wednesday, June 16, 2010
சிரிக்க முடியவில்லை
நானும் எத்தனையோ முறை முயற்சி செய்துவிட்டேன்.
வெளிப்பட்டது வெவ்வேறு ஒலிகள் மட்டுமே.
ஆனால்
உன்னை போல் - கண்ணே
கண்களில் சிரிக்க முடியவில்லை என்னால்!!!
வெளிப்பட்டது வெவ்வேறு ஒலிகள் மட்டுமே.
ஆனால்
உன்னை போல் - கண்ணே
கண்களில் சிரிக்க முடியவில்லை என்னால்!!!
Monday, June 14, 2010
ஒட்டியுன் ஒட்டாமலும்
ஒட்டியுன் ஒட்டாமலும்
எட்டி நிற்கலாம் - என்று
நினைத்த போதுதான் தெரிந்தது,
உன்னுள் எப்படி ஒட்டி கிடக்கிறேன் என்பது!!!
எட்டி நிற்கலாம் - என்று
நினைத்த போதுதான் தெரிந்தது,
உன்னுள் எப்படி ஒட்டி கிடக்கிறேன் என்பது!!!
தள்ளி நின்று
உள்வாங்கிய உணர்வுகளை உதறித்தள்ளி
ஒரு அடி, உன்னைவிட்டு தள்ளி நின்று பார்பதற்கு
எனக்கு ஒரு நூற்றாண்டு போதாது .
ஒரு அடி, உன்னைவிட்டு தள்ளி நின்று பார்பதற்கு
எனக்கு ஒரு நூற்றாண்டு போதாது .
Tuesday, June 1, 2010
நட்பில் காதல்
அதிகாலை பொழுதில்
அன்று பூத்த ரோஜாவின் இதழில்
அழகான பனிதுளிகள் !!!
ரோஜாவிற்கு சுகம்,
பனித்துளிகளை சுமபதற்கு!
பனித்துளிக்கும் இதம்,
ரோஜாவின் மீது அமர்திருப்பதற்கு !!
இந்த இதமும் சுகமும்
ஆதவன் வருகையால் ......?????
யாரிடம் முறையிடும் இப்பூ ......?????
யாரிடம் கேட்கும் அதன் நட்பை .....?????
அன்று பூத்த ரோஜாவின் இதழில்
அழகான பனிதுளிகள் !!!
ரோஜாவிற்கு சுகம்,
பனித்துளிகளை சுமபதற்கு!
பனித்துளிக்கும் இதம்,
ரோஜாவின் மீது அமர்திருப்பதற்கு !!
இந்த இதமும் சுகமும்
ஆதவன் வருகையால் ......?????
யாரிடம் முறையிடும் இப்பூ ......?????
யாரிடம் கேட்கும் அதன் நட்பை .....?????
Monday, May 31, 2010
Subscribe to:
Posts (Atom)