காத்திருந்து காத்திருந்து
கனத்துப் போய்
கட்டுக்கடங்காமல் அலைமோதும்
காதலியே (கார்மேகமே)!
வாடி நிற்கும்
காதல் முகம் பாராயோ !
வந்து மடி சேராயோ !
கனத்த காதல் மனதை,
மெல்லிய என் - சுவாச
காற்று கொண்டு கலைக்கவா ?
கடல் இறங்கி மண் தொட்டது போல் ,
காட்றாறாய் , புயல் காற்றாய்
கட்டுக்கடங்காமல்,
கலந்து கிடப்போம் வா!!!
Friday, October 29, 2010
Tuesday, September 28, 2010
மழையே மழையே ஓடி வா !
மழையே மழையே ஓடி வா !
மண்ணில் இறங்கி ஆட வா!
புதிய தாளம் போடா வா !
மண்ணின் மனம் உணர்த்த வா!
பயிர்கள் எல்லாம் தழைக்கவே ,
பசுமை எங்கும் நிறையவே ,
பாரில் இன்பம் நிலைக்கவே -
தரை இறங்கு மேகமே !
தரணி எல்லாம் வாழவே !!
மண்ணில் இறங்கி ஆட வா!
புதிய தாளம் போடா வா !
மண்ணின் மனம் உணர்த்த வா!
பயிர்கள் எல்லாம் தழைக்கவே ,
பசுமை எங்கும் நிறையவே ,
பாரில் இன்பம் நிலைக்கவே -
தரை இறங்கு மேகமே !
தரணி எல்லாம் வாழவே !!
Monday, September 6, 2010
பயணத் துணை!
தொலை தூர
பேருந்து பயணத்தில் ,
பக்கத்தில் நீ இல்லை என்ற பரிதவிப்பை,
என்னோடு நடந்து வந்த
பால் நிலா பகிர்ந்தது!
பேருந்து பயணத்தில் ,
பக்கத்தில் நீ இல்லை என்ற பரிதவிப்பை,
என்னோடு நடந்து வந்த
பால் நிலா பகிர்ந்தது!
Saturday, August 28, 2010
ஒரு யுகம் கடத்தது போல்..
உன்னை தேடும் விழிகள்
உன்னவருடையதாக இருக்கலாம்.
ஆனால் ,
உனக்காக உருக்கி அழும் விழிகள்
என்னுடையது .
காலை தனிமையை
காபி குடித்து
கடந்து செல்ல - உன்
கணவரால் முடியும்.
ஆனால் ,
கதிரவனே!
காலையில் நீ இல்லையேல்,
என் நாளே
விடிவதில்லை!
என் உலகில் ,
நேற்று பார்த்தது
எதுவும் மாறவில்லை !
ஆனால்,
இன்று எதுவும் எனதில்லை :(
பசித்து உண்ணவில்லை!
சிரித்து பேசவில்லை!
விளையாடி தீர்கவில்லை!
விருப்பம் போல் நடக்கவில்லை !
உற்சாகம் எனக்கில்லை!
உன் பெயரை தவிர,
வேறேதுவும் உச்சரிக்கவில்லை !
வெறித்து பார்த்தேன் விட்டத்தை
வெறுத்து பார்த்தேன் இந்த நாளை !
தேடி தீர்த்துவிட்டேன்
தென்படுவாய் என!
தேய்ந்து ஓய்ந்துவிட்டேன்
தேடல் பொய்த்ததென!
ஒரு வயதான என்னை ,உன்னவருடையதாக இருக்கலாம்.
ஆனால் ,
உனக்காக உருக்கி அழும் விழிகள்
என்னுடையது .
காலை தனிமையை
காபி குடித்து
கடந்து செல்ல - உன்
கணவரால் முடியும்.
ஆனால் ,
கதிரவனே!
காலையில் நீ இல்லையேல்,
என் நாளே
விடிவதில்லை!
என் உலகில் ,
நேற்று பார்த்தது
எதுவும் மாறவில்லை !
ஆனால்,
இன்று எதுவும் எனதில்லை :(
பசித்து உண்ணவில்லை!
சிரித்து பேசவில்லை!
விளையாடி தீர்கவில்லை!
விருப்பம் போல் நடக்கவில்லை !
உற்சாகம் எனக்கில்லை!
உன் பெயரை தவிர,
வேறேதுவும் உச்சரிக்கவில்லை !
வெறித்து பார்த்தேன் விட்டத்தை
வெறுத்து பார்த்தேன் இந்த நாளை !
தேடி தீர்த்துவிட்டேன்
தென்படுவாய் என!
தேய்ந்து ஓய்ந்துவிட்டேன்
தேடல் பொய்த்ததென!
ஒரு நாள் நீ பிரிந்தது எனக்கு
ஒரு யுகம் கடத்தது போல்
இருக்குது அம்மா !
பாவம்ல இந்த குட்டியம்மா :(
Monday, July 19, 2010
உலக அழகி நீதாண்டி
ஓட்ட பல்லி,
உருண்டை இடுப்பி - நீதாண்டி !
முட்டக் கண்ணி
மொன்ன மூக்கி - நீதாண்டி !
இட்லி கன்னம்
இழுச்ச வாயி - நீதாண்டி !
புட்டு சட்டி
பூசணிக்க - நீதாண்டி !
அடி அழகி
உன்னை என்ன சொன்னாலும்
உலக அழகி நீதாண்டி!!!
உருண்டை இடுப்பி - நீதாண்டி !
முட்டக் கண்ணி
மொன்ன மூக்கி - நீதாண்டி !
இட்லி கன்னம்
இழுச்ச வாயி - நீதாண்டி !
புட்டு சட்டி
பூசணிக்க - நீதாண்டி !
அடி அழகி
உன்னை என்ன சொன்னாலும்
உலக அழகி நீதாண்டி!!!
Monday, July 5, 2010
மங்கை இவள்
பச்சை பட்டுடுத்தி,
பவல்ல மல்லி பூச்சூடி ,
ஈரத் தலை கோதி,
இளகிய பார்வை வீசி ,
இறுகிய நெஞ்சங்களை இலகக்க,
மலர் பந்து மடி தந்து காத்து நிக்கும்
மங்கை இவள் -
மலைகளின் அரசியாம் நீலகிரி !!!
பவல்ல மல்லி பூச்சூடி ,
ஈரத் தலை கோதி,
இளகிய பார்வை வீசி ,
இறுகிய நெஞ்சங்களை இலகக்க,
மலர் பந்து மடி தந்து காத்து நிக்கும்
மங்கை இவள் -
மலைகளின் அரசியாம் நீலகிரி !!!
Wednesday, June 16, 2010
சிரிக்க முடியவில்லை
நானும் எத்தனையோ முறை முயற்சி செய்துவிட்டேன்.
வெளிப்பட்டது வெவ்வேறு ஒலிகள் மட்டுமே.
ஆனால்
உன்னை போல் - கண்ணே
கண்களில் சிரிக்க முடியவில்லை என்னால்!!!
வெளிப்பட்டது வெவ்வேறு ஒலிகள் மட்டுமே.
ஆனால்
உன்னை போல் - கண்ணே
கண்களில் சிரிக்க முடியவில்லை என்னால்!!!
Subscribe to:
Posts (Atom)